Advertisement

கட்டண விபரத்தை காட்டி மிரட்டும் ஸ்டாலின்

மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் சுதா போட்டியிடுகிறார். இவர், சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்று எம்.பி.,யாகி விட்டால் அவரை, கும்மிடிப்பூண்டிக்கு பயணம் செய்து தான் வாக்காளர்கள் பார்க்க முடியும் என கிண்டலாக, பா.ம.க., வேட்பாளர் ம.க.ஸ்டாலின் சார்பில் சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் பதிவு வெளியிட்டுள்ளனர்.

அதில், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை சந்திப்பதற்கான வழித்தடங்கள் மற்றும் பேருந்து, ரயில் கட்டண விபரங்கள் என குறிப்பிட்டு, கும்பகோணம் - கும்மிடிப்பூண்டி 314 கி.மீ., துாரம், அங்கிருந்து செல்ல 6:36 மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமென, வரைபடத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கும்பகோணத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நேரடி பஸ் போக்குவரத்து இல்லை என குறிப்பிட்டு, இரு நகரங்களுக்கும் இடையேயான பஸ் கட்டணத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

'காங்., வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால், அவரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்பதற்கு பணம் செலவு செய்ய வேண்டும். இது உங்களுக்கு தேவையா?' என்ற கேள்வியுடன், சமூக வலைதளங்களில் இந்த பதிவு பரவி வருகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்