வரி அல்ல… வழிப்பறி: பா.ஜ., அரசை சாடிய ஸ்டாலின்

"ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஓட்டலுக்குச் சென்றால் பில்லில் உள்ள ஜி.எஸ்.டி.,யை பார்த்து புலம்புகின்றனர். அடுத்து செல்பி எடுத்தாலும் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டுமா?" என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

நரேந்திர மோடி முதல்வரான போது, ' என் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த முடியும்' என்றார். ஆனால், பிரதமரானதும், 'ஜி.எஸ்.டி பொருளாதார சுதந்திரம்' என்று கூறி 'ஒரே நாடு ஒரே வரி' திட்டத்தை கொண்டு வந்தார்.

ஓட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஓட்டலுக்குச் சென்றால் பில்லில் உள்ள ஜி.எஸ்.டி.,யை பார்த்து புலம்புகின்றனர்.

அடுத்து செல்பி எடுத்தாலும் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டுமா. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ., அரசால் ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜி.எஸ்.டி.,யில் கிடைக்கும் தொகையில் 64 சதவீத தொகை 50 சதவீத அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. 33 சதவீத ஜி.எஸ்.டி., 40 சதவீத நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகிறது.

வெறும் 3 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே 10 சதவீத பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


S.V.Srinivasan - Chennai, இந்தியா
16-ஏப்-2024 11:06 Report Abuse
S.V.Srinivasan தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு இதெல்லாம் எந்த ரக பறியை சேர்ந்தது முக்கிய மந்திரி அவர்களே???
Nagarajan S - Chennai, இந்தியா
15-ஏப்-2024 19:08 Report Abuse
Nagarajan S ஜிஎஸ்டி வரியில் ஐம்பது சதவீதம் மத்திய அரசுக்கும் மீதமுள்ள ஐம்பது சதவீதம் மாநில அரசுக்கும் தான் பகிரிந்தளிக்க படுகிறது. ஒவ்வொரு பில்லிலும் பார்த்தல் அதன் விபரம் தெரியும். மொத்தத்தையும் மத்திய அரசே எடுத்துக்கொள்வது போல இவர் கூறுகிறாரே? பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.அதன் சர்வ தேச விலை ஏற்ற தாழ்வுகளை வைத்து நிர்ணயிக்க படுகிறது. இவற்றின் விலையை குறைக்க வில்லை என்று கூறும் இந்டி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் இந்த மூன்று பொருட்களையும் ஜிஎஸ்டி யில் சேர்க்க மறுத்து, அதற்கு உண்டான மொத்த வரியையும் மாநில அரசுகளே எடுத்துக்கொள்கின்றனவே ? பின் எப்படி இவற்றின் விலை குறையும் ?
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்