பா.ஜ., காட்டும் டிரைலர் எல்லாம் பிளாப் ஆகும்: செல்லூர் ராஜூ

"சில படங்களின் டிரைலர் நன்றாக இருக்கும், படம் சொதப்பிவிடும். அதுபோல், பா.ஜ., காட்டும் டிரைலர் பிளாப் ஆகிவிடும்" என, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.

செல்லூர் ராஜூ கூறியதாவது:

கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முன்பு நிறைய கதைகளை எழுதினார். இப்போது கதை விடுகிறார். அவரிடம் சரக்கும் இல்லை; முறுக்கும் இல்லை. அவர்கள் கூட்டணியில் வலுவும் இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரை அண்ணாமலை நன்றாக மாட்டிக்கொண்ட ஆடு போல இருக்கிறார். ஒரு பக்கம் சிங்கம், ஒரு பக்கம் சிறுத்தை. இதற்கு இடையில் சிக்கிய ஆட்டுக் குட்டியாக மாட்டிக் கொண்டு என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது எங்கள் வேட்பாளர் சரவணன் தான். அரசியல் விழிப்புணர்வு மிக்க பூமியாக மதுரை இருக்கிறது. பா.ஜ., வேட்பாளர் சீனிவாசன் நோட்டாவை காட்டிலும் குறைந்த ஓட்டு தான் வாங்கப் போகிறார்.

மதுரை ஆன்மிக பூமி. இதைச் சொல்லி ஓட்டு வாங்கிவிடலாம் என பா.ஜ., நினைக்கின்றனர். இங்கு அப்படி எதுவும் நடக்காது. சில படங்களில் டிரைலர் நன்றாக இருக்கும், படம் சொதப்பிவிடும். அதுபோல், பா.ஜ., காட்டும் டிரைலர் பிளாப் ஆகிவிடும்.

ஒரு இடத்துக்கு மோடி செல்கிறார் என்றால் நன்றாக எழுதி கொடுங்கள். அவர் சொன்னதையே செய்யவில்லை. இனி என்ன செய்யப் போகிறார். எங்களிடம் நன்றாக இருந்த ஒருவர் இன்றைக்கு பலாப்பழத்துடன் நிற்கிறார். அந்தப் பழம் பழுக்காது; அழுகிப்போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


K.Ramakrishnan - chennai, இந்தியா
16-ஏப்-2024 23:17 Report Abuse
K.Ramakrishnan செல்லூரார் சொன்னால்... சென்ட் பர்சென்ட் சரியே..
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்