Advertisement

இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை: ஸ்டாலின் ஆதங்கம்

"லோக்சபாவில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும். வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்" என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஏற்படப் போகும் பாரதூரமான பாதகம் என்னவென்றால் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்திய பார்லிமென்ட்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

தமிழகம் உள்பட மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம். சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?

தமிழகத்தில் கோரிக்கைகளை, உரிமைக் குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், லோக்சபாவில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும். வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழகத்தின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

மோடியின் பா.ஜ.,வுக்கு வாக்களிப்பதற்கும், பழனிசாமியின் அ.தி.மு.க.,வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

லோக்சபாவில் தமிழகத்தின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாக கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாக தமிழகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.,வையும் அவர்களின் மறைமுகக் கூட்டாளியான அ.தி.மு.க.,வையும் புறக்கணிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்