ரூ.300 உனக்கு; ரூ.200 எனக்கு 'கமிஷன்' அடித்த உடன்பிறப்புகள்
கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., - காங்., லோக்சபா வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களை அழைத்து வர, அந்தந்த வார்டு தி.மு.க., பிரமுகர்களுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தி.மு.க., பிரமுகர்கள் ஏற்பாடு செய்தனர். கூட்டத்துக்கு வந்த பொதுமக்களிடம் கட்சி பிரமுகர்கள், '500 ரூபாய் தரப்படும்.
அதில், 300 ரூபாய் எடுத்து கொண்டு, 200 ரூபாய் எனக்கு கமிஷன் தர வேண்டும்' என, பேரம் பேசி உள்ளனர். மேலும், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு பிஸ்கட், கட்சி தொப்பி, கீ செயின், தண்ணீர் பாட்டில் கொடுத்துஉள்ளனர்.
ஒரு சில பகுதிகளில் பொதுமக்களுக்கு 500 ரூபாய்க்கு பதிலாக, 200 ரூபாய் மட்டுமே கொடுத்துஉள்ளனர். இரவு மூன்று இட்லி, இரண்டு ஊத்தப்பம், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கி தந்ததால், 200 ரூபாய் மட்டுமே கொடுத்து உள்ளனர்.
'இந்த காசுக்கே, இவ்வளவு கமிஷன் அடிப்பவர்கள், இனி ஓட்டுக்கு துட்டு தரும்போது எவ்வளவு கமிஷன் அடிக்கப் போகிறார்களோ' என, மக்கள் புலம்பிச் சென்றனர்.
வாசகர் கருத்து