ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்... மகளிருக்கு மாதம் ரூ.3000 : அ.தி.மு.க., கொடுத்த 133 வாக்குறுதிகள்
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டார். 'கோவையில் எய்ம்ஸ்... மகளிருக்கு மாதம் ரூ.3,000 உரிமைத்தொகை' என வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது, அ.தி.மு.க.,
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பாக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை உள்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் தமிழகத்தின் பல்சேறு பகுதிகளில் உள்ள மக்களிடம் கருத்துகளைக் கேட்டு கடந்த பிப்.,10ம் தேதி வரைவு தேர்தல் அறிக்கையை பழனிசாமியிடம் ஒப்படைத்தனர்.
இன்று அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிட்டார். மகளிருக்கு மாதம் ரூ.3000 உரிமைத் தொகை, நீட் தேர்வுக்கு மாற்று, சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை என பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்ன?
ஆளுநரை நியமிக்கும்போது மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக மாற்று தேர்வு முறை உருவாக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். இருசக்கர வாகனங்களுக்கு தனிப் பாதைகோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை பெண்களுக்கு மாதம் ரூ.3000 உரிமைத்தொகை வழங்கப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கைஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 150 நாள்களாக அதிகரிக்க வலியுறுத்தப்படும். மத்திய அரசின் நிதி பகிர்வு 60:40 என்பதற்கு பதிலாக 75:25 சதவீதமாக மாற்றி அமைக்க நடவடிக்கைமத்திய அரசசின் இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை குடும்ப அட்டைக்கு 6 காஸ் சிலிண்டர்ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை மீண்டும் வழங்க வலியுறுத்தப்படும். முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கைபாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை அ.தி.மு.க தொடர்ந்து எதிர்க்கும். காவிரி-குண்டாறு வைகை இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மழை நீர் திட்டத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல வலியுறுத்தப்படும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் வருமான வரம்பு 8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கைஉயிர்க்காக்கும் மருந்துகளை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவ பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கைநெல் குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து