ஓட்டு சதவீதம் குறைந்தாலும் அனைத்து தொகுதிகளையும் அப்படியே அள்ளிய திமுக
சென்னை: கடந்த லோக்சபா தேர்தலை விட, இந்த முறை திமுகவின் ஓட்டு சதவீதம் 26.93 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க., கூட்டணியில், 2019 தேர்தலில் 23 இடங்களில் களம் இறங்கிய தி.மு.க., 32.76 சதவீத ஓட்டுகளை பெற்றது. இந்த முறை தேர்தலில், தி.மு.க., 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது; அதன் ஓட்டுகளும் குறைந்துள்ளன. இந்த முறை திமுகவின் ஓட்டு சதவீதம் குறைந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், அ.தி.மு.க., 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் குறைந்த நிலையில், பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட இந்த முறை, ஓட்டு சதவீதம் திமுக கூட்டணிக்கு குறைந்துள்ளது.
இது திமுக ஆட்சிக்கு எதிரான தமிழக மக்களின் அதிருப்தியையே காட்டுகிறது என சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர் 40 தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அனைத்து தொகுதி மக்களுக்கும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து