தேர்தல் அன்று 3 வேளை ேஹாட்டல் உணவு! வாக்காளர்களை கவர கட்சிகள் திட்டம்
தேர்தல் கமிஷன் கெடுபிடியால் பொருட்கள் வினியோகம் செய்வதில் கட்சிகளுக்கு சிக்கல் உள்ளது. அதனால், ஓட்டுப்பதிவு நாளில், ஹோட்டல் உணவு வழங்கி அவர்களை தம் பக்கம் இழுக்க தென்சென்னை தொகுதியில் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
ஓட்டுப்பதிவு நாளில், பொது விடுமுறை என்பதால் வேலைக்கு செல்லும் பெரும்பாலானோர் அன்று வீடுகளில்தான் இருப்பர்.
அவர்களிடம், 'நீங்கள் பணம் வாங்க வேண்டாம்; எங்கள் கட்சிக்கு ஓட்டளியுங்கள். ஓட்டுப்பதிவு நாளில் சமைக்காமல் வீட்டில் ஓய்வு எடுங்கள். மூன்று வேளையும் 'ஆன்லைன்' வாயிலாக உணவு கொண்டு வந்து தருகிறோம்.
'ஹோட்டலுக்கு செல்வதாக இருந்தாலும், உங்களை அழைத்து செல்கிறோம். இதை லஞ்சமாக கருதாமல், எங்கள் வேட்பாளர் உங்கள் குடும்பத்தினருக்கு வைக்கும் விருந்தாக நினைத்து கொள்ளுங்கள்' என அன்பொழுக பேசுகின்றனர்.
அவர்கள் தெரிவிக்கும் பதிலை பொறுத்து, சைவமா, அசைவமா என குறிப்பெடுத்து கிளம்புகின்றனர்.
வாசகர் கருத்து