Advertisement

2 முட்டை, அரை லிட்டர் பால் பஞ்சாபுக்கு சீமான் சவால்

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் நா.த.க, வேட்பாளர் கயிலை ராஜனுக்கு ஓட்டு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒட்டன்சத்திரத்தில் பேசியது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 500 ஏக்கரில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து தினமும் இரண்டு முட்டை, அரை லிட்டர் பால் குடித்துவிட்டு மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வர். அனைவருமே பயில்வான் மாதிரி வருவர். பஞ்சாபில் எங்கு பார்த்தாலும் மாடுகளாக மேய்ந்து கொண்டிருக்கும். பாலை குடித்துவிட்டு, இரண்டு முட்டைகளை சாப்பிட்டு விட்டு, விளையாட்டுப் போட்டிக்கு சென்றால் நான்தான்டா ஒலிம்பிக், நான் தான்டா ஆசியாஎன்பான்.

இந்தியாவுக்கு ஒரு கிரிக்கெட் அணி இருக்கட்டும். நான் தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டுக்கு ஒருகிரிக்கெட் அணி தயார் செய்கிறேன். இரண்டுக்கும் போட்டி வைத்தால் என் வீரர்கள் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பர்.

இவ்வாறு பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், 'வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை' என கத்தினார். இதனைக் கேட்ட சீமான் பதிலுக்கு, வாய்ப்புள்ளது ராஜா வாய்ப்புள்ளது' என்றார்.

'மைக் மக்கர்'



தென்சென்னை வேட்பாளர் தமிழ்ச்செல்வியைஆதரித்து, பள்ளிக்கரணையில் சீமான் நேற்று பிரசாரம் செய்தார். தேர்தல் கமிஷன் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது போன்ற பழைய மைக்கை பயன்படுத்தி, அவர் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மைக் மக்கர் செய்ததால், பிரசாரம் ஐந்து நிமிடங்கள் வரை தடைப்பட்டது. பின்னர்,மாற்று மைக் வழங்கப்பட்டு, பிரசாரத்தை தொடர்ந்தார். பிரசாரம் முடிந்ததும், மைக் மக்கர் செய்தது குறித்து, பிரசார வாகனத்தில் இருந்தநிர்வாகிகளிடம் சீமான் கோபத்தை கொட்டினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்