தபால் ஓட்டு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் இரண்டாம் கட்ட பயிற்சியில் அறிவுறுத்தல்
தேனி, : தபால் ஓட்டுகள் எண்ணும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சியில் அறிவுறுத்தி உள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் தபால் ஓட்டுகள் எண்ணுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சுற்றிற்கு தபால் ஒட்டுகள் 500 ஓட்டுகள் வீதம் எண்ணப்படும். தபால் ஓட்டில் வாக்காளரின் கையொப்பம், அலுவலக பதவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டளிக்காத, ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தால், சேதமான, கிழிந்த நிலையில் உள்ள ஓட்டுசீட்டுகள், உறுதிமொழி படிவம் இல்லாத தாபல் ஓட்டுகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் செல்லதக்க, நிராகரிக்கப்பட்ட ஓட்டுசீட்டுகளை தனித்தனியாக உறையில் வைத்து சீல் வைக்க வேண்டும்.
தபால் ஓட்டுகள் எண்ணும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மாலையில் ஓட்டுபதிவு இயந்திரங்கள் மூலம் எவ்வாறு ஓட்டு எண்ணிக்கை நடத்துவது குறித்து ஒட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், மைக்ரோ அப்சர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷீலா, தேர்தல் தாசில்தார் செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் பாலசண்முகம், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து