20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,

சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., கடும் தோல்வியை சந்தித்த போதிலும், அக்கட்சி பெற்ற ஓட்டுகளால், 20 தொகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பறிபோயுள்ளது.

அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கி, நடத்தி வருகிறார். இக்கட்சி, 2019 லோக்சபா தேர்தலில், சில முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், சில தொகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றது.அதைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., உட்பட, பல்வேறு கட்சிகளுடன் இணைந்து களம் இறங்கியது. லோக்சபா தேர்தலை போல, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட தினகரனும் தோல்வியை தழுவினார். பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.அதேநேரம், 20 தொகுதிகளில், அ.ம.மு.க., பெற்ற ஓட்டுகளால், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

*கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், 977 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளர், 2,230 ஓட்டுகளை பெற்றார்

* காட்பாடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், 748 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில், அ.ம.மு.க., 1,040 ஓட்டுகளை பெற்றது

* விருத்தாசலம் தொகுதியில், காங்., வேட்பாளர், 862 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு, அ.ம.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க., 26 ஆயிரத்து, 908 ஓட்டுகளை பெற்றது

* காரைக்குடியில், காங்., வேட்பாளர், 21 ஆயிரத்து, 589 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு அ.ம.மு.க., 44 ஆயிரத்து, 864 ஓட்டுகளை பெற்றது

* நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ், 15 ஆயிரத்து, 363 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அ.ம.மு.க., 30 ஆயிரத்து, 596 ஓட்டுகளைப் பெற்றது

* ராஜபாளையத்தில், தி.மு.க., வேட்பாளர், 3,789 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 7,623 ஓட்டுகளைப் பெற்றது

* மயிலாடுதுறையில் காங்கிரஸ், 2,747 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அ.ம.மு.க., 7,282 ஓட்டுகளை பெற்றது

* திருமயத்தில், தி.மு.க., 919 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 1,426 ஓட்டுகளை பெற்றது

* கந்தர்வகோட்டையில், மா.கம்யூ., 12 ஆயிரத்து, 721 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 12 ஆயிரத்து, 840 ஓட்டுகளைப் பெற்றது

* பாபநாசம் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சி, 16 ஆயிரத்து, 273 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு, அ.ம.மு.க., 19 ஆயிரத்து, 778 ஓட்டுகளை பெற்றுள்ளது

* மன்னார்குடியில் தி.மு.க., 37 ஆயிரத்து, 393 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 40 ஆயிரத்து, 481 ஓட்டுகளைப் பெற்றது

* ஆண்டிப்பட்டியில், தி.மு.க., 8,538 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 11 ஆயிரத்து, 896 ஓட்டுகளைப் பெற்றது உத்திரமேரூரில், தி.மு.க., 1,622 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு அ.ம.மு.க., 7,211 ஓட்டுகளைப் பெற்றது

* திருவாடானை தொகுதியில், காங்கிரஸ் கட்சி, 13 ஆயிரத்து, 316 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 32 ஆயிரத்து, 74 ஓட்டுகளைப் பெற்றது\

* வாசுதேவநல்லுார் தொகுதியில், ம.தி.மு.க., 2,367 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 13 ஆயிரத்து, 376 ஓட்டுகளைப் பெற்றது

*சாத்துாரில், ம.தி.மு.க., 11 ஆயிரத்து, 179 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 32 ஆயிரத்து, 916 ஓட்டுகளைப் பெற்றது

* சங்கரன்கோவிலில், தி.மு.க., 5,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 22 ஆயிரத்து, 676 ஓட்டுகளைப் பெற்றது தென்காசியில் காங்கிரஸ், 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 9,944 ஓட்டுகளை பெற்றது

* திருப்போரூரில், வி.சி.க., 1,947 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 7,662 ஓட்டுகளை பெற்றது சென்னை தி.நகரில், தி.மு.க., 137 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க.,782 ஓட்டுகளை பெற்றிருந்தது.


Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
07-மே-2021 13:11 Report Abuse
Sadagopan Varadhachari ஆமாம் தலைவா அதே போல 49 தொகுதிகளில் நீங்கள் NOTA வை குறைவாக வாக்கு வாங்காமலிருந்தால் நீங்கள்தான் வருங்கால முதலமைச்சர். வெட்கமேயில்லாமல் உளறுகிறார். இவர் குறிப்பிட்ட 20 தொகுதிகளில் சிலவற்றில் சீமானும் நோட்டாவும் இவரை விட அதிக வாக்குகள் பெற்று இவரை பின்னுக்கு தள்ளி இருக்கிறது குறிப்பாக சொல்லப்போனால் அதிமுக மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்ற பெரும்பாலான தொகுதிகளில் சீமானின் கைதான் ஓங்கி இருக்கிறது.
ELAN - Gingee,இந்தியா
06-மே-2021 15:38 Report Abuse
ELAN அடுத்த கட்ட நடவடிக்கையாக அ.தி.மு.க -வும் அ.ம.மு.க -வும் இணைப்பு நாடைபெறப்போகுது இதற்குத்தான் சசிகலா ஒதுங்கி இருந்தது.
Muthu Kumar - Manama,பஹ்ரைன்
06-மே-2021 14:12 Report Abuse
Muthu Kumar இந்த புத்திக்காகத்தான் அம்மா அவரை நினைவு இருக்கும் வரை உள்ளே அனுமதிக்க வில்லை. அதற்கு பழி வாங்க தான் இப்போது அதிமுகவை தோற்கடித்து இருக்குறார். கட்சிக்குள் பிரச்சனைகள் துரோகங்கள் எல்லாக் காலத்திலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. அதனால் இது வரை கட்சியை யாரும் உடைத்து இல்லை. இவர் தான் அதிமுகவிற்கு முதல் எதிரி. ஸ்டாலின் இல்லை.
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
07-மே-2021 13:20Report Abuse
Sadagopan Varadhachariஇல்லை திரு முத்துக்குமார் இவர் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்ற தொகுதிகளை இவருக்கு சாதகமாக கூறி தானும் அரசியலில் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள பார்க்கிறார். ஆனால் உண்மை நிலவரம் கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் இவர் வாங்கிய வாக்குகள் நோட்டாவை விட குறைவே. eci results வலைதளத்தில் பார்க்கமுடியும் .தொகுதிவாரியாக நான் எடுத்திருக்கிறேன்...
Narayanan - chennai,இந்தியா
06-மே-2021 10:19 Report Abuse
Narayanan உண்மையிலேயே தினகரனுக்கும் அவர் கட்சிக்கும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று இருந்திருந்தால் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்திருக்க வேண்டும் . அப்படி நடந்தும், அதிமுக தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஒழுங்காக வேலைபார்த்துஇருந்தால் தேர்தல் அதிகாரிகளை கண் கொத்தி பாம்பாக கவனித்திருந்தால் அதிமுக ஆளும் கட்சியாகத்தான் தொடர்ந்திருக்கும் . இனி சொல்லி பயனில்லை .
G.Kirubakaran - Doha,கத்தார்
06-மே-2021 09:53 Report Abuse
G.Kirubakaran தினகரன் ஒரு கோடாலி . ஆதிமுகவை அடியோடு ஒழித்தவர். இவர் தானா ஜெயலலிதா மடியில் வளர்ந்தவர்
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
06-மே-2021 06:45 Report Abuse
madhavaraman அதிமுக ஓட்டுகள் பறிபோயிருந்தாலும் கூட தினகரன் எம் எல் ஏ ஆக முடியாமல் போய்விட்டது வருத்தம்தான்..,
Ananth - chennai,இந்தியா
05-மே-2021 11:40 Report Abuse
Ananth He should try you unite with AIADMK, otherwise no future for him.
bal - chennai,இந்தியா
04-மே-2021 22:13 Report Abuse
bal தமிழக மக்கள் எப்படி எப்போதும் திருட்டு குடும்பத்துக்கே வோட்டு போடுது...அது திமுக அமமுக அதிமுக எல்லோரும் திருடர்கள்தான்...மக்கள் குவாட்டர், பிரியாணி, துட்டு மற்றும் பொய் மேல் விசுவாசம் கொண்டவர்கள்...
bal - chennai,இந்தியா
04-மே-2021 22:11 Report Abuse
bal இவர் மட்டுமா...சென்னையில் திமுக ஜெயிப்பதற்கு காரணம் கமல்...அதற்குத்தான் இன்று அச்சாரம் வாங்க ஸ்டாலினை பார்க்க போனார்.
sankar - Nellai,இந்தியா
04-மே-2021 21:40 Report Abuse
sankar இவர்களை சேர்த்துக்கொண்டு வெற்றிபெறுவதைவிட தோற்பதே மேல்
மேலும் 50 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)