பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு: எ.வ.வேலுவை சாடிய ராமதாஸ்

"நேரு மூன்று முறை பிரதமராக இருந்தார். அவர் மகளும் 3 முறை பிரதமராக இருந்தார். மோடியும் மூன்றாவது முறையாக பிரதமராக வரப் போகிறார்" என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

ஆரணியில் பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து ராமதாஸ் பேசியதாவது:

உள்ளூர் சந்தையில் விலைபோகாத ஒன்று, வெளியூர் சந்தையில் விலை போனதாம். ஆரணியில் இருந்தவர், கடலூரில் போட்டியிட சென்றிருக்கிறார். அதைப் பார்க்கும் போது சினிமா பாட்டு தான் ஞாபகம் வந்தது. 'சொந்தமும் இல்வை.. பந்தமும் இல்லை' என்ற பாட்டு தான் இது.

ஓர் அமைச்சர் சொல்கிறார். அவர் பெரிய இடத்தில் உள்ள பெரிய அமைச்சர். ஆமாம் திருவண்ணாமலை தான். 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து கேட்டால், 'அது எதற்கு.. நியாய விலைக்கடையில் எடை போடுவது, மூட்டை தூக்கும் வேலைக்குப் போங்கள். கலெக்டரை விட உயர்ந்த வேலைகள் எல்லாம் இருக்கிறது. அதற்கு ஐ.ஏ.எஸ் எல்லாம் படிக்க வேண்டியதில்லை' என்கிறார்.

10.5 சதவீத ஒதுக்கீட்டுக்காக முதல்வரை கோட்டையில் சென்று பார்த்தேன். அங்கு 10 அமைச்சர்கள், தலைமை செயலர் உள்பட பலர் இருந்தார்கள். ஸ்டாலினுக்கு 35 நிமிடம் வகுப்பே எடுத்தேன். சாதிவாரி கணக்கெடுப்பு, 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேசினேன். அது புரிந்ததோ புரியவில்லையோ தெரியவில்லை.

திருவண்ணாமலையை சேர்ந்தவர், 'எதற்கு 10.5?' எனக் கேட்டார். அவர் வரலாறு அப்படி. சிவபெருமான் கதையில் ஒரு பாம்பு வரும். அது கருடனைப் பார்த்து, 'சவுக்கியமா? எனக் கேட்டது. அந்த மாதிரி இருக்கிறது.

செஞ்சிக்கு வந்தால் அங்கு ஒரு பெரிய அமைச்சர் இருக்கிறார். இந்த இரண்டு அமைச்சர்களையும் எதிர்த்து பா.ம.க., வேட்பாளர் வெற்றி பெறப் போகிறார். நான் ஒரு போராளி என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்காக 10 வருடங்களுக்கு முன்பு பல கம்பெனிகள் வந்தார்கள்.

தங்களுக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டுமென கேட்டார்கள். அதற்கு 100 ஏக்கர் போதும். அவர்களைத் தடுக்க பலகட்ட போராட்டங்களை நடத்தி அதை வரவிடாமல் தடுத்தேன்.

நேரு மூன்று முறை பிரதமராக இருந்தார். அவர் மகளும் 3 முறை பிரதமராக இருந்தார். மோடியும் மூன்றாவது முறையாக பிரதமராக வரப் போகிறார். தி.மு.க.,வின் 3 ஆண்டுகால ஆட்சி, இந்த தேர்தல் மூலம் கணிக்கப்படும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


Barakat Ali - Medan, இந்தோனேசியா
02-ஏப்-2024 09:04 Report Abuse
Barakat Ali திமுக எம் பி களால் பயனில்லை .... அவையில் கூச்சல், காண்டீனில் மேய்ச்சல் .... பிறகு மீண்டும் அவையில் வெளிநடப்பு செய்து விட்டு வெளியில் வந்து வெட்டியாக அரட்டை அடிப்பார்கள் .....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்