Advertisement

'என் தலைவனை தொட்டு பார்' மோடிக்கு ராமசாமி சவால்

முதல்வர் ஸ்டாலினை கைது செய்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை பா.ஜ., அறிந்துள்ளதால் முதல்வரை கைது செய்யாமல் விட்டுள்ளனர் என்று காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலத்தில் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து பிரசாரம் செய்த காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசியதாவது:

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் என கைது செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலினை ஏன் கைது செய்யாமல் விட்டுள்ளனர் என்று தெரியுமா.

நம் முதல்வர் மீது கை வைத்தால் நாம் என்ன செய்வோம் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தான் விட்டு வைத்துள்ளனர். இல்லாவிட்டால், ஏதாவது காரணத்தை கூறி ஏற்கனவே கைது செய்திருப்பர். காங்., கட்சியின் கணக்குகளை முடக்கி உள்ளனர். ராகுல், டில்லியில் இருந்து இங்கு பிரசாரத்திற்கு வந்தால் செலவுக்கு என்ன செய்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்