தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்கள்; எந்த பதவியை ராஜினாமா செய்வர்?

சென்னை : அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி.,க்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், அமைச்சராக வேண்டும் என்பதற்காக, இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியிலும்; வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியிலும் களமிறங்கினர். இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியை பறிகொடுத்துள்ளது. எனவே, இருவரும் எம்.பி., பதவியில் தொடர்வரா அல்லது துறப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.பி., பதவியை தொடர்ந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அந்த தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்கும். எம்.எல்.ஏ., பதவியில் இருந்தால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது, எம்.பி., பதவிக்கு இடைத்தேர்தல் வரும்.எனவே, இவர்கள் இருவரால், எம்.பி., பதவி அல்லது எம்.எல்.ஏ., பதவிக்கு, இடைத்தேர்தல் வருவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க., - எம்.பி., முகமது ஜான் மறைவு காரணமாக, அவரது எம்.பி., பதவி காலியாக உள்ளது.


Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
03-மே-2021 18:08 Report Abuse
Anbuselvan ரெண்டு ஸீட்டுலே அதிமுக இழக்கறதுக்கு ஒன்னும் இல்லை. ஆனா திரு வைத்தியலிங்கத்தின் ராஜ்ய சபா பதவி 2022 இல் முடிந்து விடுகிறது. திரு முனுசாமி ஐ ஏன் தேர்தலில் போட்டியிட வைத்தார்கள் என தெரியவில்லை அவரது ராஜ்யசபா MP பதவிக்காலம் 2026 வரை உள்ளது. திரு முனுசாமி ராஜினாமா செய்வார். திரு வைத்தியலிங்கம் ரேஸிங் செய்ய மாட்டார்.
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-2021 00:33Report Abuse
தல புராணம்அந்த ரெண்டு எம்எல்ஏ சீட்டையும் அடுத்து வந்த வேட்பாளருக்கு கொடுத்து விடுவது தான் முறை.. இல்லைனா இடைத்தேர்தலுக்கு இவர்களின் கட்சியிடம் செலவு பணத்தை அரசு வசூலிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்துக்கும் சேர்த்து....
Darmavan - Chennai,இந்தியா
03-மே-2021 17:58 Report Abuse
Darmavan பொது நல அமைப்புகள் இதற்கு வழக்கு போட வேண்டும்.தேர்தல் செலவை வென்று ராஜினாமா செய்பவர்கள் ஏற்க வேண்டும் என்று.
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-2021 00:31Report Abuse
தல புராணம்புதுச்சேரி தேர்தலில் ரங்கசாமி ரெண்டு இடத்திலே நின்னு போட்டியிட்டார், பொது நல அமைப்புகள் இதற்கு வழக்கு போட வேண்டும்.தேர்தல் செலவை பாஜாக்கா / ரெங்கு கிட்டே வசூல் பண்ணனும்னு சொல்லுவியா ?? நல்லவேளை ரெண்டு இடத்துலே நின்னாப்புலே.. இன்னொரு இடத்திலே சுயேச்சை கிட்டேயே அடி வாங்கி தோத்திருக்காரு.....
Darmavan - Chennai,இந்தியா
03-மே-2021 17:49 Report Abuse
Darmavan இந்தபொறுப்பற்ற திருடர்களிடம் மறு தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்.
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-2021 00:30Report Abuse
தல புராணம்புதுச்சேரி தேர்தலில் ரங்கசாமி ரெண்டு இடத்திலே நின்னு போட்டியிட்டார், அவரையும் "திருடன்", அந்த திருடன் கிட்டேருந்து வசூல் பண்ணனும்ன்னு சொல்லுவியா ?? நல்லவேளை ரெண்டு இடத்துலே நின்னாப்புலே.. இன்னொரு இடத்திலே சுயேச்சை கிட்டேயே அடி வாங்கி தோத்திருக்காரு.....
Girija - Chennai,இந்தியா
03-மே-2021 16:35 Report Abuse
Girija இது தேர்தல் கமிஷனின் வேலை இன்னும் தூங்கி வழிகிறது . வாஜ்பாய் அரசு கவிழ்வதற்கு காரணமான ஒரு ஒட்டு கிரிதர் கோமங்கோ ஒரிசா காங்கிரஸ் , முதலில் நாடாளுமன்றத்தில் எம் பி ஆனார் அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆனால் பதவி ஏற்கும் முன் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தது உடனே அங்கு சென்று ஒட்டு போட்டு ஒரு ஆட்சி கவிழ மற்றும் இந்திய நாடே மறு தேர்தலை சந்திக்க வைத்து மக்கள் வரி பணத்தை கரைத்தார். இந்த நிகழ்விற்கு பிறகும் சட்ட திருத்தம் தேர்தல் கமிஷன் கொண்டுவரவில்லை .
vnatarajan - chennai,இந்தியா
03-மே-2021 15:17 Report Abuse
vnatarajan இவர்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்வதே மேல். இல்லாவிட்டால் காலியான எம்மெல்லே பதவிக்கு மாரு தேர்தல் வைத்தால் ஒருவேளை டிஎம்கே போட்டியாளர் ஜெயிக்க வாய்ப்பு உண்டு அப்போது ஏடிஎம்கேக்கு இரண்டு சீட் குறைந்துவிடும் மேலும் மக்கர் வரிப்பணம் தேர்தலுக்காக வீணடிக்கப்படும்
Elango - Kovai,இந்தியா
03-மே-2021 14:32 Report Abuse
Elango எப்படி இருந்தாலும் திமுகவிற்கு லாபம்... எடப்பாடி/சுனில் இதை கவனிக்கவில்லையா ???
periasamy - Doha,கத்தார்
03-மே-2021 13:56 Report Abuse
periasamy எம் பி பதவியைத் துறந்தால் அது திமுகவிற்க்கே பலன் எமேலே பதவியை துறந்தால் தொகுத்து மக்கள் பணம் பெறுவார்கள் என்பதால் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தால் நல்லது
தல புராணம் - மதுரை,இந்தியா
03-மே-2021 11:47 Report Abuse
தல புராணம் இடைத் தேரதலுக்கான செலவை அந்த வேட்பாளரின் கட்சி ஏற்கவேண்டும் என்ற அவசரச்சட்டம் கொண்டாறலாம். இல்லை, இதுக்கு ஒத்துக்கலைன்னா, எந்தபதவியை ராஜிநாமா செய்றாங்களோ, அந்த தேர்தலில் இரண்டாவது இடத்தில் வந்தவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கி கணக்கை சரி பண்ணுங்க.
RAMESH TK - chennai,நைஜீரியா
03-மே-2021 14:41Report Abuse
RAMESH TKசரியான தீர்ப்பு...
03-மே-2021 10:55 Report Abuse
ஸ்டாலின் :: பாவம் இந்த வைத்தி , ADMK இருக்கும்போது தோத்தார் மந்திரி பதவி போச்சு , இப்போ ஜெயிச்சார் ADMK இலலை இப்பவும் மந்திரி பதவி இல்லை சரியான அஷ்ட தரித்திரம் போல
03-மே-2021 10:45 Report Abuse
ஆரூர் ரங் MP வரும்படி குறைவு. இங்கு எதிர்கட்சி MLA ஆக இருந்தாலும் வரும்படி வாய்ப்பு மற்றும்😇 அதிகாரம் அதிகம். சென்ற 10 ஆண்டுகளில் சொத்து மதிப்பு குறைந்த எதிர்கட்சி திமுக MLA யாராவது 🤔🤔 உண்டா?
மேலும் 14 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)