Advertisement

நடிகர் விஜய் ஆதரவு பெற ஓ.பி.எஸ்., தரப்பு முயற்சி

அ.தி.மு.க.,வை மீட்கப்போவதாகக் கூறி, ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அதே பெயரில், 5 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுகள் மட்டுமின்றி, பா.ஜ.,வின் ஹிந்து ஆதரவு ஓட்டுகள் கைகொடுக்கும் என, கணக்கு போட்டு, பன்னீர்செல்வம் களத்தில் குதித்துள்ளார். வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதற்காக, நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் ஓட்டுகளை கைப்பற்றவும், வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்திடம், முதற்கட்டமாக ரகசிய பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளிக்கும்பட்சத்தில், 2026 சட்டசபை தேர்தலில், அக்கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கையும் அளிக்கப்பட்டு உள்ளது. இதை, பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரும் உறுதி செய்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்