ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லும் ஊழியருக்கு '‛கலர் டீசர்ட்' வழங்க முடிவு
சிவகங்கை : காரைக்குடி ஓட்டு எண்ணும் மையத்திற்குள் ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லும் ஊழியர்களுக்கு கலர் டீசர்ட் வழங்கப்படும் என சிவகங்கையில் நேற்று நடந்த வேட்பாளர், அவர்களது ஏஜன்ட்களுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துகழுவன், (தேர்தல்) ஜான்சன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் தாசில்தார் மேசியாதாஸ், வேட்பாளர், பவர் ஏஜன்ட்கள் பங்கேற்றனர்.
ஜூன் 4 அன்று ஓட்டு எண்ணும் பணி நடக்கும் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி வளாகத்திற்குள் அன்று காலை 6:30 மணிக்குள் அனைத்து வேட்பாளர், அவர்களது ஏஜன்ட்கள் வந்துவிட வேண்டும்.
ஒரு தொகுதிக்கு 14 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி நடக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒருவர் வீதம் வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் பங்கேற்க வேண்டும்.
காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும், அதனை தொடர்ந்து காலை 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கும். மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கும் அடையாள அட்டையுடன் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து, ஓட்டு எண்ணும் இடத்திற்கு இயந்திரத்தை எடுத்து வரும் ஊழியர்களுக்கு தொகுதி வாரியாக கலர் டீசர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து