Advertisement

முதல்வர் 'டீல்' செய்த மதுரை 'பஞ்சாயத்து'

மதுரையில் கள நிலவரம் மாறிவருவதால், தி.மு.க., கூட்டணியின் மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனுக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை நகர் பகுதிக்கு உட்பட்ட நான்கு சட்டசபை தொகுதிகளில், 2019ல் பெற்ற ஓட்டுகள் அப்படியே கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு காரணம், அவரை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன், பா.ஜ., வேட்பாளர் ராமசீனிவாசனுக்கு பெருகும் ஆதரவு தான். வேட்பாளர் அறிவிப்பின்போது வெங்கடேசனுக்கு இருந்த சாதகமான சூழ்நிலைதற்போது 'டல்லடித்து'வருகிறது.

மதுரை நகரில் மேற்கு, தெற்கு, புறநகரில் மேலுார் சட்டசபை தொகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு தி.மு.க.,வின் ஒத்துழைப்பு இல்லை என கம்யூ., கட்சியினரே புலம்புகின்றனர்.

இதற்கிடையே நகரில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள சில வர்த்தக சங்கங்கள், யாதவர், நாயுடு, கிறிஸ்துவ சமூக அமைப்புகளுடன் அ.தி.மு.க., தரப்பில் கச்சிதமாக 'பேசி' முடித்துஉள்ளனர்.

இத்தகவல் வெங்கடேசன் தரப்பிற்கு தெரியவந்ததும், நெருங்கிய அதிகாரிகள் மூலம், ஸ்டாலின் கவனத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மதுரையில் குறிப்பிட்ட சில சங்க நிர்வாகிகளுக்கு அவசர அழைப்பு சென்றது.

அவர்களை மதுரை நகர் செயலர் தளபதி, ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றார். அவர்களுடன் நடந்த சந்திப்பில், 'ஆதரவு அளியுங்கள்; உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் உறுதியளித்தார். அதேசமயம் சில சங்கங்களை முதல்வர் சந்திக்கவில்லை என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

அவர்கள் கூறுகையில், 'தேர்தல் முடிந்தபின் ஓட்டு எண்ணிக்கை வரை, ஒன்றரை மாதம் வரை அமலில் இருக்கும் தேர்தல் விதிமுறைகளில், வர்த்தகர்களுக்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.

'மத்திய அரசு சார்ந்தே, பல தொழில்கள் உள்ளன. இதனால், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உரசல்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்துவதாக இருந்தோம். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்