ஐ.பி.எல்., போட்டி அரசியலுக்கு அடி
தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளுக்கு ஏப்., 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. கட்சிகளின் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், முக்கிய நிர்வாகிகள், பயண திட்டத்தை அறிவித்து பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். வாக்கிங் பிரசாரம், மேடை பிரசாரம், வாகன பிரசாரம் எல்லாம் களைகட்டி வருகிறது.
இந்நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, நாள்தோறும் இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது. இரவு 8:00 மணிக்கு பின் ஆட்டம் பரபரப்பாகிறது. இரவு 12:00 மணி வரை போட்டி நடக்கிறது.
இதனால், போட்டியைக் காண, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தேர்தல் பிரசாரத்தைக் கேட்ககூட்டம் சேருவதில்லை. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில், பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதில்லை.
இதனால், இரவுநேர பிரசாரத்தை, தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் தவிர்க்கத் துவங்கியுள்ளனர். அதற்கு பதிலாக, காலை, 9:00 மணிமுதல் பகல், 2:00 மணிவரை தீவிர பிரசாரம் செய்கின்றனர். மாலையில் துவங்கி இரவில், 8:00 மணிக்கு முன்பாக பிரசாரத்தை முடித்துக் கொள்கின்றனர்.
வாசகர் கருத்து