சீர்வரிசை தட்டுடன் ஓட்டளிக்க அழைப்பு
வரும் லோக்சபா தேர்தலுக்கு 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் விரும்புகிறது. அதற்காக, மாநிலம் முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், பிரமாண்டமான பலுான், கோலப் போட்டி, விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம், உள்ளூர் கலைஞர்களின் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு, கலெக்டர் பிரபுசங்கர் நேற்று காலை மேளதாளம் முழங்க, பாக்கு, வெற்றிலை, பழம் உள்ளிட்ட சீர்வரிசையுடன் திருமணத்திற்கு அழைப்பது போல், அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் எடுத்துக் கொண்டு தெருக்கூத்து கலைஞர்களுடன் சென்றார்.
எதிர்கொண்டோரிடமெல்லாம் பத்திரிகை வழங்கி, 'ஏப்., 19ல் நடக்கும் லோக்சபா தேர்தலில், அனைவரும் ஓட்டளிக்க வரவேண்டும். வாக்காளர்களாகிய நீங்கள், உங்களின் ஓட்டுகளை கட்டாயம் செலுத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
வாசகர் கருத்து