சொந்த செலவு, வாகனம் கமல் பிரசாரத்திற்கு ரெடி
தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், தன் சொந்த வாகனத்தில் பிரசார பயணம் மேற்கொள்ள, கமல் முடிவு செய்துள்ளார்.
இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியை, ம.நீ.ம., கட்சி ஆதரித்துள்ளது. தேர்தலில் போட்டியிடாமல், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ம.நீ.ம., தலைவர் கமல் மாநிலம் முழுதும் பிரசாரம் செய்ய வேண்டும் என, தி.மு.க., தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது. இதற்காக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், கமலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
அதை ஏற்று, வரும் 29ம் தேதி முதல், சூறாவளி சுற்றுப்பயணத்தை கமல் துவங்க உள்ளார். அதற்கான பிரசார வாகனம் உள்ளிட்ட ஏற்பாடுகளை, கூட்டணி கட்சிகள் செய்து தரும் என, கமல் எதிர்பார்த்தார். அதனால், தன் சொந்த பிரசார வாகனத்தை பராமரிக்காமல் வைத்திருந்தார். அது துாசு படிந்து கிடந்தது.
ஆனால், கமலை பிரசாரத்துக்கு அழைத்த கூட்டணி கட்சிகள், வாகனம் வழங்கவும், மற்ற செலவுகளை கவனிக்கவும் முன்வரவில்லை. இதனால், சொந்த வாகனத்தை சரிசெய்து, சொந்த செலவில் பிரசாரப் பயணம் மேற்கொள்ள கமல் முடிவு செய்துள்ளதாக, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஏற்கனவே நடந்த இரு தேர்தல்களில், ஒரு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, அடுத்து நடந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனாலும், கட்சி தோல்வி அடைந்தது.
வாசகர் கருத்து