செய்யத் தவறியதை சொல்வது நேர விரயம்: கமல் விளக்கம்
"எய்ம்ஸ் மருத்துவமனையை பிற மாநிலங்களில் உருவாக்க முடிந்த மத்திய அரசால், தமிழகத்தில் ஏன் கொண்டு வர முடியவில்லை?" என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
மதுரை மா.கம்யூ., சு.வெங்கடேசனை ஆதரித்து கமல் பேசியதாவது:
நல்லவர் என்னும் பட்டத்தை ஒருவரால் மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. நல்லது செய்ய வேண்டும் என்றால் கூட அனுமதி பெற வேண்டும். அதற்காகவே அரசியலுக்கு வர தீர்மானித்தேன்.
நல்லவர்கள் நல்லதை செய்ய அரசியலுக்கு வர வேண்டும். வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என மார்தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்யப்போவதைத் தான் சொல்ல வேண்டுமே தவிர செய்யத் தவறியவற்றை பட்டியலிடுவது நேர விரயம்.
மதுரை எனக்கு காண்பித்த அன்பை மறக்க முடியாது. அது இன்னும் நீள வேண்டும் என்பதே என் விருப்பம். மதுரையையும் தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது. மதுரையையும் என்னையும் பிரிக்க முடியாது. மதுரையை மாநகராக உயர்த்திப் பெருமை சேர்த்தவர் கருணாநிதி.
நம்மைப் பிரிப்பதற்கு பல சக்திகள் இருக்கின்றன. கீழடிக்கு அருங்காட்சியகம் அமைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டோம். அவர்கள் செய்து தரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை பிற மாநிலங்களில் உருவாக்க முடிந்த அவர்களால், தமிழகத்தில் ஏன் கொண்டு வர முடியவில்லை. தமிழகத்திற்கு மட்டும் ஓரவஞ்சனை ஏன்?
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து