தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான் : துரைமுருகன்

"தேர்தலில் ஆசைப்பட்டு நிற்கவில்லை. ஆனால், வெற்றி பெற்று வந்த பிறகு நிலைத்து நிற்கிறேன். தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான்" என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

அரக்கோணம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இது தொடர்பாக நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

என்னிடம், 'தேர்தலில் நிற்கிறாயா?' என கருணாநிதி கேட்டார். 'நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' எனப் பதில் கொடுத்தேன். அவரிடம், 'தேர்தலில் போட்டியிட்டாலும் செலவு செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை' என்றேன். அந்த தேர்தலில் செலவுக்கு கருணாநிதி பணம் கொடுத்தார்.

தேர்தலில் விருப்பமில்லாமல் தான் போட்டியிட்டேன். அதன்பிறகு 12 முறை என்னை வெற்றி பெற வைத்தார்கள். 13வது முறையும் என்னை வெற்றி பெற வைப்பார்கள். தேர்தலில் ஆசைப்பட்டு நிற்கவில்லை. ஆனால், வெற்றி பெற்று வந்த பிறகு நிலைத்து நிற்கிறேன். இதில், நான் கில்லாடி.

தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். இதுவரையில் 26 இடைத்தேர்தல்களை பார்த்திருக்கிறேன். வாழ்வும் சாவும் என்னை ஒன்றும் செய்யாது.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


DUBAI- Kovai Kalyana Raman - dubai, ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-2024 09:07 Report Abuse
DUBAI- Kovai Kalyana Raman வேலூர் , அரக்கோணம் மக்கள் முட்டாள்கள் இல்லை இனிமேல் உன்னையும் உன் மகனையும் ஜெயிக்க வைக்க ..
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,, இந்தியா
27-மார்-2024 06:34 Report Abuse
NicoleThomson அப்புறம் எதற்கு போன தேர்தலில் பிகாரி பார்ப்பனரை அழைத்து வந்து 380 கோடி கொடுத்தீங்க
bal - chennai, இந்தியா
26-மார்-2024 23:49 Report Abuse
bal துகில் உரிவதில் கூட தான்..வெட்கமில்லாதவர்கள்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்