'ஒரு கோடி ரூபாயுடன் வாங்க பட்டியலுடன் போங்க'

திருப்பூர் சிட்டிங் எம்.பி., சுப்பராயன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று கேட்டு, பணிகள் பட்டியலை கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு, சமூக வலைதளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தது.
இதுதொடர்பாக, தினமலர் 'தேர்தல்களம்' சிறப்பு பகுதியில், நேற்று செய்தி வெளியானது. இச்சூழலில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மனு தாக்கல் செய்துவிட்டு வந்த, வேட்பாளர் சுப்பராயனிடம், 'தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே?' என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
வேட்பாளர் சுப்பராயன், அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், “ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறிய நபரும், அவரின் அமைப்பினரும், செய்தியாக வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரும், ஒருகோடி ரூபாயுடன், என் எம்.பி., அலுவலகத்துக்கு வந்தால், விபரம் முழுவதையும் தெரிவிக்கிறேன். ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கவும் காத்திருக்கிறேன்; எப்போது வேண்டுமானாலும் வரலாம்,” என்று கூறினார்.
வாசகர் கருத்து