திருப்பூர் தெற்கு, எம்.எல்.ஏ., குணசேகரன், பிரசார கூட்டங்களில் பேசும் போது, 'டிவி' நாடகங்கள் மற்றும் அவற்றில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பெயரை குறிப்பிட்டு பேசுவார்; சில நேரங்களில், உருக்கமாக பேசி, பார்வையாளர்களை அழ வைத்து விடுவது, அவருக்கு கைவந்த கலை. பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, ''துணை மேயரா இருந்தப்ப, கார் விபத்தில் சிக்கி தப்பினேன். பின், எம்.எல்.ஏ.,வாகி, சேவை செஞ்சிருக்கேன். அப்போது, இதயத்தில் பிரச்னை வந்து, 'ஆபரேஷன்' செஞ்சு பிழைச்சு வந்திருக்கேன்; நான் மறுஜென்மம் எடுத்ததே, உங்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேணும்னு தான். அக்கா, தங்கச்சிங்க எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தீங்கன்னா... மொதல்ல, 'வாஷிங் மெஷின்' வாங்கி கொடுத்திடுவேன்...'' என்றார். 'சென்டிமென்ட்'டாக பேசியதால், ஆண் வாக்காளர்களும் கண் கலங்கினர்!
வாசகர் கருத்து