தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தது ஏன்: ஓ.பி.எஸ்., சொன்ன காரணம்
தேனி லோக்சபா தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட உள்ளதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க,வுக்கு தேனி, திருச்சி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேனியின் சிட்டிங் எம்.பி.,யாக ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத் குமார் இருக்கிறார். அவரே மீண்டும் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அ.ம.மு.க.,வுக்கு பா.ஜ., ஒதுக்கியது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற சட்டரீதியாக போராடி வந்த பன்னீர்செல்வத்துக்கு தோல்வியே மிஞ்சியது. இதையடுத்து, ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், தேனி தொகுதியில் தினகரன் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " தேனி தொகுதியில் தினகரனும் ரவீந்திரநாத் குமாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். தினகரன் விரும்பியதால், நன்றிக்கடனாக அவருக்கு தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தோம். அங்கு தினகரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.
வாசகர் கருத்து