தந்தை சொன்ன வாக்குறுதி மீண்டும் மொழியும் மகன்
தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் வக்கீல் மணியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி, இரு நாட்களுக்கு முன் ஒடசல்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அமைச்சர் உதயநிதி, சில வாக்குறுதிகளை அளித்தார். அவை, கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்து, நிறைவேற்றப்படாமல் உள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பொதுவான அறிவிப்புகளோடு, தர்மபுரி மாவட்டத்துக்கு, 44 அறிவிப்புகளை கூறியிருந்தார். அதில், தர்மபுரியில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம், நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைக்கப்படும். வேப்பாடி ஆற்றில், பாளையம் அருகில் அணை கட்டப்படும். ஒகேனக்கல் காவிரியாற்றின் உபரி நீரை, மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களுக்கு நிரப்பி, பாசன வசதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல், கே.ஈச்சம்பாடி தென்பெண்ணையாறு நீரேற்றும் திட்டத்திற்கு, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது அதே வாக்குறுதிகளை மீண்டும் உதயநிதி கூறியுள்ளார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து