லேட்டஸ்டா வந்தாலும் 'சீட்'



மதுரை அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் சரவணன், நகர செயலரான செல்லுார் ராஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரை வாழ்த்தி நிருபர்களிடம் செல்லுார் ராஜு கூறுகையில், ''டாக்டரை பாருங்க... சிரிச்சுக்கிட்டே இருக்கிறாரு. இப்படியே சிரித்தவாறே அவரை பார்லிமென்ட்டிற்கு அனுப்புவோம். இப்படி ஒரு வேட்பாளர் நமக்கு கிடைக்கும்னுல.

''அவரு சுத்த தங்கம். அ.தி.மு.க.,வுக்கு மதுரையில் இருந்துதான் முதல் வெற்றி கிடைக்கும். அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் கிடையாது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தாலும் 'சீட்' கொடுப்பதுதான் அ.தி.மு.க.,வின் பாணி'' என்றார்.

டாக்டர் சரவணன் கடந்தாண்டுதான் பா.ஜ.,வில் இருந்து அ.தி.மு.க.,வுக்கு வந்தவர். அதைத்தான் மறைமுகமாக செல்லுார் ராஜு குறிப்பிடுகிறார் எனப் பேசி, நமட்டு சிரிப்பு சிரித்தனர் கட்சிக்காரர்கள்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்