தி.மு.க.,வில் 'சீட்' குறைப்பை ஏற்க முடியாது

சென்னை சத்தியமூர்த்தி பவனில், ஈ.வெ.கி.சம்பத், 98வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு தமிழக காங்., முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், மரியாதை செலுத்தினர்.

பின், இளங்கோவன் கூறியதாவது:
பிரதமர் மோடி அடுத்த முறை தமிழகம் வரும் போது, தமிழர்களின் வரவேற்பு வேறு விதமாக இருக்கும். காங்கிரஸ் தான் தி.மு.க., - தி.மு.க., தான் காங்கிரஸ்.

தி.மு.க., கூட்டணியில், ஐந்து முறை தேர்தல்களை சந்தித்துள்ளோம். காலத்தின் சூழலுக்கு ஏற்ப தொகுதிகள் பிரித்தாளப்படுகின்றன. காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை என்பதை ஏற்கிறேன். அதற்காக, தி.மு.க., கூட்டணியில் தொகுதிகள் குறைக்கப்படுவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்