அண்ணாமலை அல்ல, இமயமலையே வந்தாலும் : பொள்ளாச்சி ஜெயராமன் கணிப்பு
"இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி வந்த ஒருவர், இன்று சுயேச்சையாக மாறி போட்டியிடுகிறார்" என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்தார்.
லோக்சபா தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில், அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் கார்த்திக், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் தன் தந்தை வழியில் கட்சிக்காக பணியாற்றி வருகிறார்.
அண்ணாமலை மட்டுமல்ல எந்த இமயமலை வந்தாலும், திருவண்ணாமலை ஆண்டவரின் அருளால் ராமச்சந்திரன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார். கோவையில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராமச்சந்திரன் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்.
நீலகிரி தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை எதிர்த்து, ஊழல் மன்னன் ஆ.ராசா நிற்கிறார். அவரை எதிர்த்து லோகேஷ் வெற்றி பெறுவார். அ.தி.மு.க.,வின் மூன்று வேட்பாளர்களும் தொண்டர்கள் மத்தியில் நல்ல வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி வந்த ஒருவர், இன்று சுயேச்சையாக மாறி போட்டியிடுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து