தாமரை சின்னம் ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி
இந்தியாவின் தேசிய மலரான தாமைரையை பா.ஜ.,வின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை தடுக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர் அகிம்சை சோசலிச கட்சியின் தலைவர்.கடந்தாண்டு இவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தேசிய மலரான தாமரையை பா.ஜ.,வுக்கு வழங்கியது அநீதி, இதனை ரத்து செய்யவேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை மனு அளித்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
என் மனுவை பரீசிலனை செய்து பா.ஜ.,வுக்கு தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலாநீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று விசாரனைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்டபின் நீதிபதிகள் மனுதாரர் தாக்கல் செய்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை என கூறிதள்ளளுபடி செய்தனர்.
வாசகர் கருத்து