தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்
லோக்சபா தேர்தலில் போட்டியிடும், 21 தொகுதிகளுக்கான தி.மு.க., வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி தலைமையிலான குழுவினர் தயாரித்த தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகிறது.
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
வரும் 22ம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசும், தேர்தல் பிரசாரம் முதல் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. அக்கூட்டத்தில் 12 வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து துாத்துக்குடியில் நடக்கவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் தென்மாவட்டங்களின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
அ.தி.மு.க., பட்டியல்
கூட்டணி கட்சிகள் தவிர்த்த மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க., தயார் செய்துள்ளது. இன்று கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதி ஒதுக்கீடை அறிவித்து, நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிட, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
வாசகர் கருத்து