Advertisement

சிவகங்கை காங்கிரசில் வெடித்த கோஷ்டி பூசல்

சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்., சிட்டிங் எம்.பி.,யான கார்த்திக்கு எதிராக போட்டியிட, அக்கட்சி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ., தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளார்.

இத்தொகுதியை தி.மு.க., - காங்., கூட்டணியில், இம்முறை தி.மு.க.,விற்கு ஒதுக்க அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, தேவக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் உள்ளிட்டோர் காங்., தலைவர் ராகுலை விமர்சனம் செய்த கார்த்திக்கு, மீண்டும் சிவகங்கையில் 'சீட்' தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கார்த்தி இருவருக்குமான எதிர்கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இத்தொகுதியில் போட்டியிட சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி, வேலுச்சாமி ஆகியோர் தனித்தனியாக தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு அளித்தனர்.

இதையடுத்து, கட்சிக்குள் கோஷ்டி பூசல் பூதாகாரமாக வெடிக்கத் துவங்கியுள்ளது. இதை தி.மு.க.,வினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்