ஓட்டுவங்கிக்கு ஆப்பு வைத்த அமைச்சர்: கலக்கத்தில் சிவகங்கை காங்., வேட்பாளர்
சிவகங்கை தொகுதியில் முத்தரையர் ஓட்டு வங்கிக்கு ஆப்பு வைத்த அமைச்சரின் பவுன்சர்களால் காங்., வேட்பாளர் கலக்கத்தில் உள்ளனர்.
இப்தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் கார்த்திக்கிற்கு ஆதரவாக அமைச்சர் பெரியகருப்பன் எஸ்.புதுார் ஒன்றியத்தில் பிரசாரம் செய்தார். ரோடு சரியில்லை என்று புகார் கூறிய கிராம மக்கள் மீது அமைச்சருடன் வந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
தட்டிக் கேட்க முயன்ற பா.ஜ., நிர்வாகியும் தாக்கப்பட்டார். இப்பகுதியில் பெரும்பான்மை சமூகமான முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சரின் பவுன்சர்கள் தாக்கியதால், அப்பகுதி முழுதும் காங்.,குக்கு எதிராக கொந்தளிப்பாகிஉள்ளது.
தமிழர் தேசம் கட்சித் தலைவரும், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவருமான கே.கே.செல்வகுமார் வரை, இப்பிரச்னை புகாராக எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் கார்த்தி தரப்பு கலக்கம் அடைந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் பலன் எங்கே ஓட்டுப்பதிவில் எதிரொலிக்குமோ என்ற அச்சத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பா.ஜ., நிர்வாகி உள்ளிட்ட கிராமத்தினரிடம் அமைச்சர் தரப்பு, சமரசம் பேசி பிரச்னையை தற்காலிகமாக முடித்துள்ளது.
ஆனாலும் இளைஞர்கள் விடுவதாக இல்லை. வீடுபுகுந்து தாக்கியவர்களை தேர்தலில் பழிதீர்க்க வேண்டும் என்று முத்தரையர் சமூகத்தவரை முடுக்கி வருகின்றனர். இதை பா.ஜ., தரப்பு, முத்தரையர் ஓட்டு வங்கியை மொத்தமாக அள்ள காய்நகர்த்தி வருகிறது.
இதனால், முத்தரையர்களை தாக்க காரணமாக அமைந்த அமைச்சர் தரப்பு மீது காங்கிரசார் வருத்தம் அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து