'ஓட்டின் வாழ்வுதனை நோட்டு வெல்லும் மீண்டும் ஓட்டே வெல்லும்'

பொள்ளாச்சி லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், 'ஓட்டின் வாழ்வுதனை நோட்டு கவ்வும், ஓட்டே மீண்டும் வெல்லும்; பணம் பத்தும் செய்யும், நாம ஒரு நல்லது செய்வோம்; காசு வாங்காம ஓட்டுப் போடுவோம்' என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களை ஈர்த்து வருகின்றன.
ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள், படிப்பவர்களின் சிந்திக்க துாண்டுவதுடன், கவனத்தையும் ஈர்க்கின்றன.
'க்யூஆர் கோடு'
ஒவ்வொரு பிளக்ஸிலும் 'க்யூ ஆர் கோடு' அமைக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால், 'நாட்டுக்கான எனது முதல் ஓட்டு' என செல்பி போட்டோவை பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து