'தி.மு.க.,வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது'

''இனி எக்காலத்திலும் தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது,'' என, ஐ.ஜே.கே., நிறுவன தலைவரும், எம்.பி.,யுமான பாரிவேந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, ஐந்து ஆண்டுகளில் தொகுதி நிதியாக ஒதுக்கப்பட்ட, 17 கோடி ரூபாயை, அதிகளவில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செலவிட்டுள்ளேன். தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர்ந்திருந்தால், என்னால் எந்த திட்டத்தையும் தொகுதிக்கு செய்திருக்க முடியாது. அந்த அனுபவத்தால், இனி எந்த காலத்திலும் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க மாட்டோம். பெரம்பலுார் ரயில் பாதை திட்டத்துக்கு கடுமையாக பாடுபட்டுள்ளேன். அடுத்த பட்ஜெட்டில் நிச்சயம் அது நிறைவேறும்.
தி.மு.க., சார்பில் போட்டியிடுவதாக கூறப்படும், அமைச்சர் நேருவின் மகன் அருணை பலம்மிக்க வேட்பாளராக நான் கருதவில்லை. தி.மு.க.,வினரே அவரை விரும்பவில்லை. தி.மு.க., நாடக கம்பெனி போல் உள்ளது. மக்கள் சேவை என்ற எண்ணமே அக்கட்சிக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து