Advertisement

சிக்கிமில் காங்.,ஐ முந்திய ‛நோட்டா'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காங்டாக்: சிக்கிமில் காங்கிரஸ் கட்சியை(0.32%) விட நோட்டாவுக்கு(0.99%) அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



சிக்கிம் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில் மொத்தம் உள்ள 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்)31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு(எஸ்டிஎப்) ஒரு இடம் தான் கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.

இந்த தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில்,

எஸ்கேஎம் கட்சிக்கு 58.38 சதவீதம்

எஸ்டிஎப் கட்சிக்கு 27.37 சதவீதம்

பா.ஜ.,வுக்கு 5.18 சதவீதம்

நோட்டாவுக்கு -0.99 சதவீதம்

காங்கிரசுக்கு-0.32 சதவீதம்

மற்றவர்கள் 7.77 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளனர்.



12 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டும், ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத போதிலும், நோட்டாவுக்கு குறைவாக ஓட்டுகளை பெற்றுள்ளது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.



அருணாச்சல பிரதேச நிலவரம்




அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் பாமேங் தொகுதியில் போட்டியிட்ட குமார் வால் என்பவர் மட்டும் 6,554 ஓட்டுகள் பெற்று வெற்றி வெற்றி பெற்றார். மற்ற 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். அக்கட்சிக்கு 5.56 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்