'நோட்டா'விற்கு ஓட்டளிக்க துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம்
புதுக்கோட்டை லோக்சபா தொகுதி, 2009ல் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை திருச்சி தொகுதியிலும், விராலிமலை கரூர் தொகுதியிலும், திருமயம், ஆலங்குடி சிவகங்கை தொகுதியிலும், அறந்தாங்கி ராமநாதபுரம் தொகுதியிலும் இணைக்கப்பட்டது.
இதனால், பாரம்பரியமிக்க புதுக்கோட்டை லோக்சபா தொகுதி பறிபோனது. இத்தொகுதியை மீண்டும் மீட்டெடுக்க தொகுதி மீட்பு குழு துவங்கப்பட்டது.
இக்குழு, 2009 முதல் மிக தீவிரமாக பிரசாரம் செய்து, நாட்டிலேயே முதன்முறையாக, 2009 தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று 49 - ஓவிற்கு, 15,000 ஓட்டு விழுந்தது. இது அரசியல் கட்சிகளுக்கு பேரிடியாக இருந்தது.
பின்னர், 2014 தேர்தலில் நோட்டாவிற்கு 51,000 ஓட்டுகளும், 2019ல் 46,000 ஓட்டுகளும் தொகுதி மீட்பு குழு பிரசாரத்தின் வாயிலாக நோட்டாவிற்கு பெறப்பட்டன.
தற்போதைய லோக்சபா தேர்தலில் மீண்டும் தொகுதி மீட்பு குழு களமிறங்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு குழுக் களாக பிரிந்து நோட்டாவிற்கு ஓட்டளிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து