கூட்டணி இல்லாமல் வெற்றி இல்லை: திருமாவளவன் கணிப்பு
"தேர்தலில் கூட்டணி அமைக்க முடியாதவர்களால் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது" என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவளவன் கூறியதாவது:
பா.ஜ., கடந்த 1 வருடங்களாக கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் வேலையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை அவர்களுக்கு ஏற்ற கட்சிகளை பிடிக்கவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இதுவரை கூட்டணி அமைக்கவில்லை. பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார். கூட்டணி அமையாமலேயே அவர் பிரசாரத்தை துவக்கிவிட்டார்.
தமிழகத்தில் என்ன முயற்சி செய்தாலும் கூட்டணி அமைக்க முடியாதவர்கள், வெற்றிபெற வாய்ப்பு இல்லை. அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்குவங்கத்திலும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சி.ஏ.ஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த பா.ஜ., முன்வந்துள்ளது. இது அவர்களுக்கு எதிராகத் தான் முடியும்.
வட மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தலை நடத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகள் உள்ளன. ஆனால், இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில் 47 தொகுதிகள் உள்ளன. அங்கு மட்டும் ஏன் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டும்?
எல்லாவிற்றிலும் அரசியல் தலையீடு இருக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது குளறுபடி செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ., நினைக்கிறது. அது நடக்கப் போவதில்லை. மக்களே பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து