'அம்மா மினி கிளினிக்' 40,000 ஓட்டுகள் அவுட்

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை உட்பட தமிழகம் முழுதும், முதல்வரின் 'அம்மா மினி கிளினிக்குகள், 2,000 எண்ணிக்கையில் துவக்கப்பட்டன. அவற்றில் தலா ஒரு டாக்டர், ஒரு பல்நோக்கு பணியாளர் மற்றும் மாற்றுப்பணியில் ஒரு நர்ஸ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இது பயனுள்ளதாகவே இருந்தது.
கடந்த 2022 மார்ச் 31ம் தேதியோடு அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்த 1,820 டாக்டர்கள் மற்றும் 1,820 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் என 3,640 பேர் தி.மு.க., அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டோர் என்ற ஒரே காரணத்திற்காக, தங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக இவர்கள் ஓட்டுப்போட முடிவு செய்துள்ளனர். இதனால் இவர்கள், இவர்களின் குடும்பத்தினர் என, 40 ஆயிரத்திற்கு குறையாத ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது.
வாசகர் கருத்து