த.வா.க., ஓட்டுகள் காங்.,குக்கு கிடைக்குமா?
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தமிழக வாழ்வுரிமை கட்சியும் இடம் பெற்றுள்ளது. அக்கட்சி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் கணிசமான ஓட்டுகளைப் பெறக்கூடிய கட்சியாக உள்ளது.
கடலுார் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்.,கின் விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார். இக்கூட்டணியில் உள்ள த.வா.க.,விற்கும் காங்., கட்சிக்குமிடையே கொள்கை ரீதியான முரண்பாடுகள் உள்ளன. இலங்கையில் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது காங்., கட்சி என த.வா.க., விமர்சித்து வருகிறது.
மறைந்த பிரபாகரனின் அனுதாபியாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு முழு ஆதரவைத் தரும் கட்சியாகவும் த.வா.க., உள்ளது. மேலும் இதுவரை காங்., கட்சிக்கு ஆதரவாக பெரிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
கடலுாரில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கூட, அக்கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., பங்கேற்கவில்லை. அவரது சகோதரர் பங்கேற்றார். இதனால், கடலுார் தொகுதியில் யாருக்கு ஓட்டு போடுவது என புரியாமல், த.வா.க., வினர் குழம்பிப் போய் உள்ளனர்.
வாசகர் கருத்து