அதிருப்தி ஓட்டுகள் நமக்கு தான்: பழனிசாமி நம்பிக்கை
லோக்சபா தேர்தலில் மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின் மீதான அதிருப்தி ஓட்டுகள் நமக்கு வருவது போல் பிரசார யுக்தியை மேற்கொள்ளுங்கள் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
பழனிசாமி பேசிய விபரங்களைப் பற்றி அ.தி.மு.க., வட்டாரத்தினர் தெரிவித்தனர்,
இந்த தேர்தலில் தி.மு.க.,- - பா.ஜ.,வினரே மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆளுங்கட்சிகள் மீதான அதிருப்தி களத்தில் அதிகமாக இருக்கிறது. இந்த ஓட்டுகளை அ.தி.மு.க.,விற்கு அறுவடை செய்ய வேண்டும். நாம் ஆட்சியில் இருந்தபோது செய்த விஷயங்களை எடுத்துச் சொல்லி, அ.தி.மு.க., ஓட்டுகளை தக்க வையுங்கள்.
இரு கட்சிகள் மீதான அதிருப்தி வாக்காளர்களை கவருங்கள். அவர்கள் இரட்டை இலைக்கு போடுவர். அந்த பணியை களத்தில் செய்யுங்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதை உறுதி செய்யும் விதமாக திண்டுக்கல்லில் நடந்த எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''ஒருபுறம் சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள் பிரச்னை ஆகியவற்றால் தி.மு.க., மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
''மறுபுறம் பா.ஜ., மீது ஜி.எஸ்.டி., காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என மக்கள் கோபமாக இருக்கின்றனர். இரண்டையும் பிடிக்காதவர்கள் இரட்டை இலைக்கு குத்தட்டும். அப்படி நாம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
வாசகர் கருத்து