லோக்சபா தேர்தல் புறக்கணிப்பா : ஓ.பி.எஸ்., கொதிப்பு
லோக்சபா தேர்தல் நிலைப்பாடு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளிவருவதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதால ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள், முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. இதுபோன்ற வதந்திகளை, விஷம பிரசாரங்களை, தவறான தகவல்களை தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம்.
லோக்சபா தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவுகள், என்னால் மட்டுமே அறிவிக்கப்படும். வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். இதனை பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.
தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்.
இந்தியாவில் நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும். அந்த அடிப்படையில் பா.ஜ.,வுக்கு ஆதரவை அளித்துள்ளோம். கூட்டணி பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதில், முடிவு எட்டப்பட்ட உடன் நானே தெரிவிப்பேன். அதுவரை, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து