தேர்தல் பத்திர விவரங்கள் எப்போது வெளியீடு: தலைமை தேர்தல் கமிஷனர் பதில்
"தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் கமிஷன் உரிய நேரத்தில் வெளியிடும்" என, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் கமிஷன் உரிய நேரத்தில் வெளியிடும். ஒவ்வொறு தேர்தல் பத்திரங்களும் வாங்கிய தேதி, வாங்கியவர்களின் பெயர் விவரம் உள்ளிட்டவற்றை தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., வழங்கியுள்ளது.
லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் தரவேண்டும்.
சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திளை தடுக்க இதற்கென ஒரு பிரிவை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வேட்பாளர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும். 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
குற்ற நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்க அனைத்து எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து