கொங்கு மண்டலத்தில் குஷ்பு விருப்பம்

காங்கிரசில் இருந்து பா.ஜ.,வில் இணைந்த குஷ்பு, 2021 சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள குஷ்பு, லோக்சபா தேர்தலில் தென் சென்னை அல்லது மத்திய சென்னையில் போட்டியிட முயற்சித்து வருவதாக தகவல்வெளியானது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடுதொகுதியில் போட்டியிட இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், அவர் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
குஷ்புவின் கணவர் சுந்தர்.சி ஈரோட்டைச் சேர்ந்தவர் என்பதால், கொங்குமண்டலத்தில் போட்டியிட முயற்சித்து வருவதாககூறப்படுகிறது.
வாசகர் கருத்து