'நான் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டா?': விஜய் பிரபாகரன்

தேனி மாவட்டம் எருமலை நாயக்கன்பட்டியில் தே.மு.தி.க., நிர்வாகி இல்ல விழாவில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியபோது, அங்கிருந்த தொண்டர் ஒருவர் 'விஜயகாந்த் போல பேசுங்கள்' என அன்பு கட்டளையிட்டார். உடனே முகம்மாறி கடுப்பான விஜய பிரபாகரன், 'அப்படி பேச நான் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் இல்லை,' என்றார்.
அவர் மேலும் பேசுகையில், '10 ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு முதுகெலும்பாக இருந்து, இரு பிள்ளைகளையும் வழிநடத்தினார் என் தாய் பிரேமலதா. விஜயகாந்த் பல நடிகர்களை தன்னுடன் நடிக்க வைத்து அவர்களது வளர்ச்சிக்கு உதவினார். இன்று என் தம்பி சண்முக பாண்டியனுக்கு யாரும் உதவவில்லை' என்றார்.
வாசகர் கருத்து