இரட்டை இலை சின்னம் : பழனிசாமி பதில் அளிக்க உத்தரவு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமி பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க., பயன்படுத்தக்கூடாது என திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அளித்துள்ளேன். இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகார் மனுவுக்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக்கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழனிசாமி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து