நடிகர் விஜய் ஆதரவு யாருக்கு : பழனிசாமி, சீமான் தீவிர முயற்சி

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் மறைமுக ஆதரவை பெறுவதற்கான தீவிர முயற்சியில் பழனிசாமி மற்றும் சீமான் இறங்கிஉள்ளனர்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். இந்த கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை கட்சி பதிவு செய்யப்படவில்லை.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, தற்போது, தமிழக வெற்றிக் கழகம் ஒதுங்கி நிற்கிறது. கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர் சேர்க்கை பணி ஆன்லைன் வாயிலாக நடந்து வருகிறது. இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக அக்கட்சி தலைமை கூறி வருகிறது. ஆனால், அதற்கான விபரங்கள்வெளியாகவில்லை.

இந்நிலையில், விஜய் ரசிகர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விரும்புகின்றனர். இதற்காக, நடிகர் விஜயின் மறைமுக ஆதரவை பெறுவதற்கு, இருவரும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கும்போது, யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக, ரசிகர்களுக்கு விஜய் வாயிலாக உணர்த்துவதற்கு இருவரும் முயற்சித்துவருவதாகக் கூறப்படுகிறது.


Sampath Kumar - chennai, இந்தியா
25-மார்-2024 09:23 Report Abuse
Sampath Kumar விஜய் சீமானுக்கு ஆதரவு தரவேண்டும் சீமன் கட்சி மட்டும் ஒரு தடவை வென்றால் போதும் மற்ற கட்சிகளின் வயிற்றில் புள்ளியை கரைக்கும் இது தமிழ் நட்டு அரசியில் காலத்தை மற்றும் சக்தியாக ஒருவதுக்கும் அதற்கு விஜய் ரசிகர்கள் உதவ வேண்டும்
Vijay D Ratnam - Chennai, இந்தியா
23-மார்-2024 23:27 Report Abuse
Vijay D Ratnam அதிமுக திமுக இரண்டு கட்சிகளிடம் ஐம்பது சதவிகிதத்துக்கு மேலான வாக்கு வங்கி உள்ளது இப்போதைக்கு விஜய் திமுக அல்லது அதிமுகவுக்கு ஆதரவு அளித்தால் 2026 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இரண்டு பெரிய கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பலமாக நுழையலாம். அரைவேக்காடுகள் பேச்சை கேட்டுக் கொண்டு டெபாசிட்டுக்கே நாக்கு தள்ளும் சீமானோட போய் சேர்ந்தா விஜய் அடுத்த கமல்ஹாசன் என்பது கன்ஃபார்ம்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்