'நாடும் ரோடும் நன்றாக ஓட்டுக்கு பணம் வாங்காதீர்'

''ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்தினால் தான் நாடும், ரோடும் நன்றாக இருக்கும்,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வள்ளுவர் பேரவை கல்லுாரி சார்பில் நடந்த கலந்துரையாடலில் கார்த்தி எம்.பி., பேசியதாவது:

நீதிமன்றத்தில் நீதிபதி வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். வழக்கறிஞர்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது பொதுவான ஒரு மொழி வேண்டும்.

எல்லாவற்றிலும் தமிழை புகுத்துவது தேவையில்லாத ஒன்று. அலைபேசியை எடுத்ததும், நாம் 'ஹலோ' என சொல்கிறோம். 'வாழ்க தமிழ்' என சொல்வதில்லை. நான் மதசார்பற்றவன். ஆனால் கடவுள் நம்பிக்கை அதிகம். அரசியல்வாதிகள் கடவுள் நம்பிக்கை இல்லை என்பர். ஆனால், அதிகமாக கோவிலுக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் தான். தேர்தல் வந்தால் பலருக்கு கடவுள் நம்பிக்கை இன்னும் அதிகமாகி விடும்.

தமிழகம் போல் எங்கும் ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தவர்களை மக்கள் பிடித்துக் கொடுத்ததாக ஒரு செய்திகூட படித்தது இல்லை. ஓட்டுக்கு பணம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் தான் நாடும்; ரோடும் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறக்கூடாது.

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள், எந்த கட்சி எவ்வளவு பணம் தருவார்கள் என்று எதிர்பார்த்தனர்.

தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவது கலாசாரமாக மாறி விட்டது. இதைத் தடுக்க அரசாலோ, சட்டத்தினாலோ முடியாது. மக்கள் மனது வைக்க வேண்டும். நான் ஓட்டுக்கு பணம் கொடுத்ததே இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்