Advertisement

செல்வப்பெருந்தகையை புறக்கணித்த காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பின், தென் மாவட்டங்களில் முதல்முறையாக மதுரையில் நடத்திய விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ஆலோசனை கூட்டத்தை, விருதுநகர் 'சிட்டிங்' எம்.பி., மாணிக்கம் தாகூர் புறக்கணித்தது, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திஉள்ளது.

'கோஷ்டி பூசல் என்ற அடையாளங்களை அழித்து, 'கட்சிக்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவேன்' என செல்வப்பெருந்தகை பதவிக்கு வந்தார்.

அவர் தலைமையில் மதுரையில் நடந்த விருதுநகர், மதுரை லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் ஆலோசனை கூட்டத்தை, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் புறக்கணித்தது, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திஉள்ளது.

காங்., நிர்வாகிகள் கூறியதாவது:

கட்சியின் தமிழக தலைவர் யார் என்ற போட்டியில் செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் உட்பட பல தலைவர்கள் இருந்தனர். மாணிக்கம் தாகூருக்கு 'டில்லி லாபி'யும், அகில இந்திய பொதுச்செயலர் வேணுகோபாலின் கரிசனமும் இருந்தது. ஆனாலும், செல்வப்பெருந்தகை தமிழக தலைவராக 'டிக்' அடிக்கப்பட்டதன் பின்னணியில் மல்லிகார்ஜுன கார்கே இருந்தார்.

நடந்து முடிந்த பெங்களூரு சட்டசபை தேர்தலில், சித்தாபூர் தொகுதியில் கார்கே மகன் பிரியங்க் கார்கே போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ளார். சட்டசபை தேர்தலில் பிரியங்க் கார்கேவுக்கு, செல்வப்பெருந்தகை பெரிய அளவில் உதவினார். அப்போது, மல்லிகார்ஜுன கார்கேவுடன் செல்வப்பெருந்தகைக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த நெருக்கமே, செல்வப்பெருந்தகைக்கு மாநிலத் தலைவர் பதவியை பெற்றுத் தந்தது.

இதனால் வருத்தம் அடைந்த மாணிக்கம் தாகூர், செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. இந்நிலையில், செல்வப்பெருந்தகை பங்கேற்ற விருதுநகர், மதுரை தொகுதிகளுக்கான தேர்தல் ஆலோசனை, நிர்வாகிகள் கூட்டங்களை, எம்.பி.,யான மாணிக்கம் தாகூர் புறக்கணித்து உள்ளார்.

ஆனால், எம்.பி., ஆதரவாளர்களோ, 'மாணிக்கம் தாகூர் தெலுங்கானா மேலிடப் பார்வையாளராக உள்ளதால், பணி நிமித்தமாக அங்கு சென்று விட்டார். தென் மாவட்டங்களில் செல்வப்பெருந்தகை நடத்தும் முதல் கட்சிக் கூட்டமே இப்படி ஆனதில், அவருக்கு வருத்தம் தான்' என கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்