தி.மு.க., கூட்டணியில் இழுபறி...எங்கள் பக்கம் வந்தால் லாபம்: ஜெயக்குமார்
"கூட்டணிக்கு வி.சி., வந்தால் கூடுதல் இடங்களைக் கொடுப்போம்" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரித்துவிட்டதாக கூறி, மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த இந்த போராட்டத்துக்கு பின், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியவதாவது:
இது திராவிட மண். பிரதமர் மோடியின் வருகையால் தமிழக பா.ஜ.,வுக்கு பலன் இருக்காது; தமிழக மக்களுக்கும் பலன் இருக்காது. வடக்கில் உள்ள கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆட்சியமைக்கும் வாய்ப்பும் கிடைக்காது. காங்கிரசுக்கு கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவர்களாலும் ஆட்சிமைக்க முடியாது. வடக்கில் இருந்து யார் இங்கே வந்தாலும் அது வீண் முயற்சி தான்.
தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரையில் அங்கே இழுபறி நீடிக்கிறது. எங்கள் கூட்டணிக்கு வேறு எந்தக் கட்சிகள் வந்தாலும் வரவேற்போம். அவர்கள் வரவில்லையென்றாலும் கவலையில்லை. அ.தி.மு.க., கூட்டணிக்குள் வி.சி., வந்தால் அவர்களுக்கு தான் லாபம். கூடுதல் இடங்களையும் கொடுப்போம். யாரிடமும் கூட்டணிக்காக நாங்கள் நிற்கவில்லை. தி.மு.க., அணியில் அதிருப்தி ஏற்பட்டால் எங்கள் கூட்டணிக்கு வரலாம்.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
வாசகர் கருத்து